ETV Bharat / city

விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழைப்பாலம் - அமைச்சர் ஏ.வ.வேலு! - குமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழைப்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்

குமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழைப்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

pwd
pwd
author img

By

Published : Jun 17, 2022, 9:37 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த பணிகளை விரைவுபடுத்துவது குறித்து பல்வேறு அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, "மதுரவாயல் - துறைமுகம் இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே முடிவடைந்துள்ளன. பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் தொடங்க உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான கண்ணாடி இழை பாலம் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் முடிந்துள்ளன- விரைவில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். மதுரையில் கலைஞர் நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது, விரைவில் முடிவடையும்.

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சாலைப் பணிகளுக்கான, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு என சிறப்பு கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக எந்தெந்த இடங்களில் நிலம் கையகப்படுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாந்தோமில் இருந்து கிண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.