ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் நிபந்தனைகளுடன் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்குகொள்ளலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில எல்லைகளின் சோதனைச் சாவடிகளில் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பு தான் மக்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம்
பல மாநிலங்களில் கேளிக்கை, கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். வருடப்பிறப்பிற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேலும், நடிகை சன்னி லியோன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உணவுப் பிரியர்களுக்காக பல விதமான உணவுகளும் உணவகங்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஆங்கில புத்தாண்டு - சென்னையில் 10000 போலீசார் பாதுகாப்பு