சென்னை: யூடியூப்-ல் பப்ஜி விளையாடியபோது சிறுவர்கள், பெண்களை இழிவாகப் பேசியதோடு, பணம் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருக்கும் மதன் மீது இன்று(ஜூலை 6) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதனின் மனைவி கிருத்திகாவிற்கு ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிருத்திகா,"எனது கணவர் மதன் மீது எதிர்மறையான கருத்துகள் பரவி வருகின்றன.
மதன் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜியை விளையாடியதாகக் கூறுவது முற்றிலும் தவறு. இந்தியாவில் சீன வெர்ஷன் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.
மதன் விளையாடி வந்தது கொரியன் வெர்ஷனாகும். மதன் மீது 159 வழக்குகள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: யூடியூபர் மதன் மனைவிக்கு ஜாமீன்
அது தவறு 4 நபர்கள் மட்டுமே புகார் அளித்துள்ளனர். அதேபோல, இரண்டு சொகுசு பங்களாக்களை வாங்கியதாகக் கூறுவதும் தவறு.
கடந்த 10 ஆண்டுகளாக எந்த சொகுசு பங்களாக்களையும் வாங்கவில்லை. ஆடி ஏ 6 கார் மட்டுமே உள்ளது. நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தோம்.
ஒரு நாளில் 20 மணி நேரம் விளையாட்டு
மதன் ஒரு நாளில் 20 மணி நேரம் பப்ஜி விளையாடி உழைத்து வீடியோ வெளியிட்டதன் மூலமாகவே சம்பாதித்தோம். தங்களது வங்கிக்கணக்கு, வீட்டின் சாவி ஆகியவற்றைக் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். மதனின் யூடியூப் சேனலோடு எனது வங்கிக் கணக்கை இணைத்தால் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளேன். யூடியூப் சேனலில் ஒரு முறை கூட நான் பேசியதில்லை.
அதற்கு எந்த ஒரு ஆதாரமும் காவல்துறையிடம் இல்லை. அதன் காரணமாகவே தனக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. அவர் யாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை.
ஆதாரம் இருந்தால் காவலர்கள் நிரூபிக்கட்டும். யூடியூப் சேனலில் பப்ஜி விளையாடி ஒளிபரப்பும் போது, வீடியோ கமெண்டில் நான்கு பேரின் தூண்டுதலின் பேரிலேயே மதன் ஆபாசமாகப் பேசிவிட்டார்.
ஆனால், அதனை பல வீடியோக்களில் பேசியதாகச் சித்தரித்து வெளியாகிறது. யூடியூப்பில் பதிவிட்ட வீடியோ மூலம் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயன்படுத்தினோம். நான்கு புகார்களை மட்டுமே வைத்து குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது எப்படி? என்றார்.
இதையும் படிங்க: மதன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்