ETV Bharat / city

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி - அறிவுரை கழகம் உத்தரவு - அறிவுரைக் கழகம்

யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிவுரை கழகம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி
author img

By

Published : Aug 21, 2021, 6:22 PM IST

சென்னை: யூ-ட்யூபர் மதன் பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரின் மனதில் நஞ்சை விதைப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் வைத்து கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், பப்ஜி மதன் பயன்படுத்திய யூ-டியூப், இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்த வழக்கில் மதனுக்கு உதவியாக இருந்த அவருடைய மனைவி கிருத்திகாவையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விளையாட்டு

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 6ஆம் தேதி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் நடத்தப்பட்டு, கடந்த 6ஆம் தேதி மதன் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

அறிவுரை கழகத்தின் உறுப்பினர்கள் ரகுபதி, ராமன், மாசிலாமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, தான் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை எனவும், தன்னால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் மதன் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

குண்டர் தடுப்புச் சட்டம் உறுதி

இந்நிலையில், யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை செல்லும் என தற்போது அறிவுரை கழகம் அதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே மதன் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் மனுவுக்கு தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 150க்கும் மேற்பட்ட புகார்கள்... 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை - இது பப்ஜி மதனின் லீலைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.