சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லியில் 70 நாள்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அதற்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். இச்சூழலில், இன்று சென்னை நகரின் முக்கிய சாலையான, அண்ணா சாலையில் பி.ஆர்.பாண்டியன், தமிமுன் அன்சாரி தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, "மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யாமல் அமைதியான முறையில் போராட அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.