சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பல்வேறு பாடங்களை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நீக்கவுள்ளதாக சில நாட்களாகக் கூறப்பட்டுவருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ச்சியாக எழுப்பிவருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் கண்டனப் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பாடங்களில் முக்கிய பகுதிகளை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசீலனை, எதிர்கால சந்ததியினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். உலக அரங்கில் நமது மாணவர்களின் போட்டித்திறனை மழுங்கடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த எண்ணத்தை கைவிடுமாறு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பதிவில் ஆங்கில செய்தித்தாள் எழுதியுள்ள தலையங்கத்தின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'மருத்துவர்களுக்கான ஓய்வூதியத்திற்கு நிதி இல்லையா?' ஸ்டாலின்