ETV Bharat / city

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு

author img

By

Published : Feb 4, 2021, 6:29 PM IST

சென்னை: திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் செல்வத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமன செய்து உத்தரவிட்டுள்ளார்.

prof. selvam appointed as vice chancellor for bharathidasan university
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்வம் நியமனம்

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்வத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்துள்ளார். இவர் பதவியேற்றதிலிருந்து மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

பேராசிரியர் செல்வம் 36 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆராய்ச்சியில் 12 தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கருத்தரங்கில் 4 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தேசிய அளவிலான கருத்தரங்கில் 341 ஆராய்ச்சி கட்டுரைகளையும், சர்வதேச அளவில் 16 கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார்.

இரண்டு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் 66 தலைப்புகளில் புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் 4 ஆராய்ச்சிகளை சிறப்பாக செய்துள்ளதுடன், 12 மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்புக்கான வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

இவர் எழுதிய வன்னிய பொருளாதாரம் மற்றும் மேலாண்மை கட்டுரை பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார். பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளிலும் பதவி வகித்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’7 பேர் விடுதலை! - ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்’

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.