சென்னை சாத்தான்காடு பகுதியைச் சேர்ந்த ராஜஸ்ரீ. இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக கடந்த ஓராண்டு காலமாக பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பணியை முடித்துக்கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது, சிந்தாதிரிப்பேட்டை வழியாக முத்துசாமி பாலம் அருகே வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் திடீரென ராஜஸ்ரீயை தாக்கி அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தாலியை பறிக்க முயன்றுள்ளனர்.
அப்போது, ராஜஸ்ரீ செயின் பறிப்பு கொள்ளையர்களுடன் போராடியதில் பாதி செயினை கையில் கெட்டியாக பிடித்துக் கொண்டதினால் கொள்ளையர்கள் மீதி பாதி செயினை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
இது குறித்து ராஜஸ்ரீ திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.