ETV Bharat / city

அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்குமா அரசு? - private schools

சென்னை: அரசு உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள், நேரடி வகுப்புகள் என முழுவீச்சில் செயல்படுகிறது. எனவே இந்தப் பள்ளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

online class
online class
author img

By

Published : Sep 22, 2020, 11:38 AM IST

தமிழ்நாட்டில், அனைத்து பள்ளிகளிலும் 25ஆம் தேதிவரை ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு அரசு தடை விதித்திருக்கக் கூடிய நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்னணி தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கரோனா காரணமாக ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இருந்தபோதும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை ஆன்லைன் வழி வகுப்புகள் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

ஆன்லைன் வகுப்பில் விதிகளை மீறி செயல்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மீது பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மீண்டும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன.

ஆனால், அரசு உத்தரவை மீறி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முன்னணி தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், நேரடியாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்டங்களில் இருக்கக்கூடிய கல்வித்துறை அலுவலர்கள் இதுபோன்று விதிமுறைகளை மீறி செயல்பட கூடிய பள்ளிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் கேட்ட பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை ஏற்கனவே பெற்றபோதும், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, இதுபோன்ற விதிமீறல்களுக்கு வித்திட்டிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.