ETV Bharat / city

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் வழக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பை அதிகரிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jun 1, 2021, 2:29 PM IST

சென்னை: கரோனா தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு, தனது கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்கக் கோரி நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சைப் பெற ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர்வதற்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி யாரும் இத்திட்டத்தின்கீழ் பயனடைய முடியாது எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக உள்ள இத்தொகையை, குறைந்தது ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், அரசின் கொள்கை முடிவு என்பதால் இது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா உருவாக்கப்பட்டதா? ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.