சென்னை மாமல்லபுரத்தில் இன்று மாலை சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக இன்று மதியம் 2 மணியளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சீன அதிபரை வரவேற்றனர். மேலும், தமிழ்நாடு பாரம்பரியத்தை விளக்கும் வகையில் மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். pic.twitter.com/LW7b4MpWHR
— Narendra Modi (@narendramodi) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். pic.twitter.com/LW7b4MpWHR
— Narendra Modi (@narendramodi) October 11, 2019அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். pic.twitter.com/LW7b4MpWHR
— Narendra Modi (@narendramodi) October 11, 2019
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். சீன அதிபரின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அதையே அவர் சீன மொழியிலும் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: