மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடியை சீனாவுக்கு அழைத்தாக குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோடி சீன அதிபரின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவர் சீனா செல்லவுள்ள தேதிகளும் பயணம் தொடர்பான மற்ற தகவல் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டுவருவதாகவும் கோகலே தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? - வெளியுறவுச் செயலர் விளக்கம்