சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரேமலதா, “20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தங்கள் கல்லூரியின் மேம்பாட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தோம். அந்த கடனில் சுமார் ஐந்து கோடி ரூபாய் அளவு திருப்பி செலுத்த வேண்டி இருக்கிறது. அதை செலுத்த நேரம் கேட்டபோது வங்கி அதை மறுத்துவிட்டது. அதன் காரணமாகவே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை சட்டரீதியாக சந்தித்து கடனை திருப்பி செலுத்துவதோடு கல்லூரியையும் விரைவில் மீட்டெடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமைதான் ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் ஏற்பட்டுள்ளது. நேர்மையாக நடப்பவர்களுக்கு சோதனை வரும். அதிலிருந்து நிச்சயம் மீண்டெழுவோம். சேவைக்காக தொடங்கப்பட்ட இந்த கல்லூரி கடனிலிருந்து மீண்டு மீண்டும் சிறப்பாக செயல்படும்” என்றார்.