ETV Bharat / city

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்குப் பிரேமலதா கண்டனம் - premalatha protest against petrol price hike

மேகதாதுவில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசின் முடிவைக் கடுமையாக கண்டிப்பதாக தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா
பிரேமலதா
author img

By

Published : Jul 5, 2021, 4:58 PM IST

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைக்கிளில் வந்த பிரேமலதா

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரேமலதா, "தொடர் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பிரேமலதா
பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து சைக்கிளில் வந்த பிரேமலதா

பெட்ரோல், டீசல், எரிவாயு, கட்டுமானப்பொருள்கள், மருந்துப்பொருள்கள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இந்தப் பேரிடர் காலத்தில் மக்கள் இதுபோன்று பல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.

சமையல் எரிவாயுவின் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும்.

ஒன்றிய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

ஜிஎஸ்டியின்கீழ் பெட்ரோல், டீசல்

உலகத்திலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகம் உள்ள நாடு இந்தியா தான். மக்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், அரசுக்கு வரி வந்து விட வேண்டும் என நினைக்கிறார்கள்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் 44 ரூபாய்க்கும், டீசல் 42 ரூபாய்க்கும் விற்க முடியும். அரசு லாபம் பெற வேண்டும் என வரியை மக்கள் மீது சுமத்தக்கூடாது.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தேமுதிக சார்பில் கண்டிக்கிறேன். அவர்களால் மேகதாதுவில் அணை கட்டவே முடியாது" என அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய பிரேமலதா, 'ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை தமிழ்நாட்டில் தேமுதிக அனுமதிக்காது எனவும், தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவை குறி வைக்கும் பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.