ETV Bharat / city

மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு மேகதாது அணை விவகாரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
author img

By

Published : Mar 13, 2022, 11:19 AM IST

திருவாரூர்: மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மார்ச் 12ஆம் தேதியான நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் (Hydrocarbon Extraction Well) தோண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டிற்கு முன் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் (ONGC) ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்கு கிணறுகள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் கிடைக்காததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஹைட்ரோகார்பன்

தற்போது புதிதாக 9 கிணறுகளில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி கோரி ஓஎன்ஜிசி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரிடெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகும், புதிய கிணறுகள் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி அமைக்க முடியாது என்பதனை அறிந்துள்ள ஓஎன்ஜிசி நிர்வாகம் திட்டமிட்டு மத்திய மாநில அரசுகளின் உறவுகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறதோ? என அஞ்சத் தோன்றுகிறது.

மு.க.ஸ்டாலினிடம் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுடன் ஓஎன்ஜிசி தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் கச்சா எண்ணெய், பாறை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கனிம வளங்களை எடுப்பதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதன் மூலம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிணறுகளிலிருந்து மறைமுகமாக ஹைட்ரோகார்பன், பாறை எரிவாயு உள்ளிட்ட எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் மெளனம் களையவேண்டும்

இது குறித்து தமிழ்நாடு அரசாங்கம் முகமது இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை உடன் வெளியிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கிணறுகள் மற்றும் கச்சா எண்ணெய் முடிந்த நிலையில் மூடப்பட்டுள்ள கிணறுகள் என அனைத்தையும் பட்டியலிட்டு அடையாளப்படுத்தி அதனை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தமிழ்நாட்டை அழிப்பதற்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ரூ.1000 கோடி சட்டவிரோதமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் அணைக்கட்டுமானப் பணி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை சட்டவிரோதம் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்திட முன்வர வேண்டும்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதில் அளிக்க முன்வர வேண்டும். முதலமைச்சர் பதிலுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும். இனியும் முதலமைச்சரின் மெளனம் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை உருவாக்கும்.

நடவடிக்கை தேவை

காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில், நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்படாமல், பல இடங்களில் மாதக்கணக்கில் விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.

சில இடங்களில் கொள்முதல் நிலையங்களை மூடி வருகின்றனர். அதை அரசு நிறுத்த வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக முதலமைச்சர் அறிவிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவரின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும்: தனியார் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.