ETV Bharat / city

மழைநீர் வடிகாலை மூடாததால் தாய், மகள் உயிரிழப்பு

சென்னை: நொளம்பூர் நெடுஞ்சாலை ஓரம் மழைநீர் வடிகாலை மூடாததால் தாய் - மகள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது தொடர்பான புகார் மனு மீது முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Potholes road accidents, Highway Dept directed to actions, MHC order

author img

By

Published : Feb 11, 2021, 4:39 PM IST

சென்னை நொளம்பூர் அருகில் மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரி பேராசிரியர் கரோலின் பிரெசில்லா, அவரது மகள் இவாலின் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கவும் கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு புதிதாக புகார் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியது. அந்த புகார் மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...கெட்டிக்காரன் பொய் 8 நாள்தான் நிற்கும் - பட்ஜெட் குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.