சென்னை: TN Governor's House: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் குடியரசு தின விருந்து நிகழ்ச்சி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கரோனா பெருந்தாெற்றின் காரணமாக குடியரசுத் தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.
கரோனா தொற்றுப்பாதிப்பு குறைந்து நிலைமை மேம்பட்ட உடன் நிச்சயமாக விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கரோனா- பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?