இது குறித்து பேசிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட், ”ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கான பேருந்து வசதியும், அதற்கான அறிவிப்பும் முறையாக இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், தேர்வு எழுத அனுமதிப்பது, பாதிக்கப்பட்ட மாணவரை மட்டுமல்லாது, தேர்வு எழுத வரும் பாதிக்கப்படாத மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதாகும்.
மாணவர்கள் எந்த கிராமங்களில், பகுதியில் உள்ளனர் என்ற விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாக உள்ளது.
எந்த வசதிகளும் இல்லாத நிலையில் எவ்வளவு மாணவர்கள்? எந்த மாவட்டத்தில் இருந்து வருகின்றனர்? அவர்களின் விவரங்கள் என்ன? என்பதை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து, மாணவர்களுக்கான "இ-பாஸ்" பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் சாத்தியமற்றது.
மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கும் போது, தமிழ்நாடு அரசு அவசர கதியில் ஏன் பொதுத்தேர்வை நடத்த வேண்டும். அதனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் 700ஐ தாண்டிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!