சென்னையில் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜெஜெ நகர், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் 'முக்கிய அறிவிப்பு' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரையும், ஆர்கே நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரையும் கரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை, காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். இப்படிக்கு ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வாக்காளர்களும், ஜெ.ஜெ.நகர் வாக்காளர்களும், எழில்நகர் வாக்காளர்களும், என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நீட் தேர்வு மதிப்பெண் வெளியீட்டில் குளறுபடி: நீதிமன்றம் அதிருப்தி