ETV Bharat / city

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு நேர்காணல்! - ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கான நேரடி ஆட்தேர்வுக்கான நேர்காணல் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

post
post
author img

By

Published : Jan 20, 2021, 1:59 PM IST

இது தொடர்பாக அரக்கோணம் அஞ்சல் கண்காணிப்பாளர் சிவ சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர் பொறுப்புக்கு, ’நேரடி ஆட்தேர்வு’ நடத்தப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அரக்கோணம் கோட்டம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, வரும் பிப்ரவரி 01 அன்று காலை 10 மணிக்கு நேரில் வரலாம்.

கீழ்காணும் தகுதியுடையோர் அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களாக தேர்வு செய்யப்படுவதற்கான நேர்முக ஆட்தேர்வில் பங்கேற்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு 18லிருந்து 50 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு விற்பனையில் அனுபவம் உடையோர், கணினி அறிவு / உள்ளூரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத்தொகைகள் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் ஆட்தேர்வுக்கு வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.