சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் பயின்று வருபவர் மாடசாமி (23). திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், பூந்தமல்லியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். இவர் இன்று காலை பூந்தமல்லி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றிருந்தபோது, அங்கு 10,000 ரூபாய் பணமும் அதற்கான ரசீதும் கிடைத்துள்ளது.
இதனைக் கண்ட மாணவர், பணத்தை எடுத்துக்கொண்டு பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பூந்தமல்லி காவல் துறையினர் தவறவிடப்பட்ட பணம் யாருடையது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்து வரும் நிலையில் யாரோ தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்த இந்த மாணவரின் செயல் காவல் துறையினரால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது.
இதையும் படியுங்க:
கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாயை காவல்துறையில் ஒப்படைத்த மாணவிகள் - குவியும் பாராட்டு!
தவறவிடப்பட்ட 15 சவரன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த ஊடகவியலாளர்!