ETV Bharat / city

நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - விசாரணை நடத்த மனு - நடிகை மதுமிதா போலீசில் புகார்

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றது குறித்து விசாரணை நடத்தக்கோரி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

bigboss contestant madhumidha police complaint
author img

By

Published : Aug 22, 2019, 10:01 PM IST

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி தற்போது ஐம்பது நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில், அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் சென்னை நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடிகை மதுமிதா போலீசில் புகார்

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டுள்ளார். நடந்த காரணங்களை எடுத்துக் கூற முற்பட்டபோதும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அதனை கூற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.

மதுமிதா எதனால் தற்கொலை செய்ய முயற்சித்தார்? எதற்காக அந்த முடிவை எடுத்தார்? அவர் தற்கொலை செய்யும் அளவிற்கு எவ்விதத்தில் மன ரீதியான உளைச்சலை ஏற்படுத்தினார்கள்? என்பது குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைவரிடமும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Intro:பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த கோரி போலீசில் புகார்.

Body:தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான வீடு போன்று அரங்கு அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தநிலையில்
மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். Conclusion:புகார் அளித்து விட்டு
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும், நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது கையில் கட்டுப்போட்ட நிலையில் எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டார் நடந்த காரணங்களை எடுத்துக் கூற முற்பட்டபோது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் அதனை கூற விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். மதுமிதா எதனால் தற்கொலை செய்ய முயற்சித்தார்? எதனால் அந்த முடிவை எடுத்தார்? அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கொள்ளும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவரை மனரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள்? தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைவரிடமும் விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.