ETV Bharat / city

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி: ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்? - தேர்வு முறைகேடு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று மாலை (டிசம்பர்.01) வெளியிடப்படுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இன்று மாலை வெளியீடு
இன்று மாலை வெளியீடு
author img

By

Published : Dec 1, 2021, 4:39 PM IST

சென்னை: 2017-18ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகள் டிசம்பர் 8,9,10,11,12 ஆகிய தேதிகளில் காலை, மாலை நேரங்களில் நடைபெறுகிறது. இதனையடுத்து 1,060 காலிப் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்கு 155 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில், சிசிடிவி மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் கண்காணிக்க முதல்முறையாக ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த முறை நடைபெற்ற தேர்வின் போது, சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் அளித்தனர். மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதி கிடையாது என்பதையும் மீறி செல்போனில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.

சிசிடிவி மூலம் நேரடியாகக் கண்காணிப்பு

இதனால் நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியம், முதல் முறையாக சிசிடிவி கேமரா மூலம் முழுவதையும் கண்காணிக்க உள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கம்பியூட்டர் மூலம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் காலை, மாலை இருவேளைகள் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்வுக்கான தேதி மற்றும் கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்களுக்குத் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் அனுமதிச் சீட்டு டிசம்பர் 1 ஆம் தேதி மாலை முதல் வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்குத் தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை - trblse@onlineregistrationform.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தல என்று அழைக்க வேண்டாம் - அஜித் குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.