சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2017-18ஆம் ஆண்டுகளுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றாச்சாட்டு எழுந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து தேர்வுகள் கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. இறுதியாக, அக்டோபர் 28ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், தேர்வர்களுக்கு 500 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த காரணத்தால் மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
டிசம்பரில் தேர்வு
இந்நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு நுழைவுச் சீட்டினை www.trb.tn.nic என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,060 காலிப்பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுகின்றனர். இதற்காக 200க்கும் மேற்பட்ட மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எப்போது? - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு