ETV Bharat / city

பொள்ளாச்சி விவகாரம்; பெண்கள் பெயரை வெளியிட்டவர்கள் மீதான வழக்கு முடித்துவைப்பு - பொள்ளாச்சி விவகாரம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து பொள்ளாச்சி அமர்வு நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தது.

high
author img

By

Published : Mar 25, 2019, 1:00 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இதுவரை பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார். அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள் துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு எதிராகவும், உள் துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு எதிராகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ”2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 பிரிவின் கீழ் குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், உள் துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் வழக்குப்பதிவு செய்யக் கோரி காவல் தலைமை இயக்குநருக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இருவரும் உயர் அலுவலர்கள் என்பதால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யமாட்டார்கள். எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன் இன்று வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்குரைஞர் நடராஜன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், மனுதாரர் தன்னுடைய கோரிக்கையை பொள்ளாச்சி அமர்வு நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெறலாம். அந்த மனு மீது நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Intro:Body:

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிடப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து பொள்ளாச்சி அமர்வு நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்லும் இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இதுவரை பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.

அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிடுவது இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 ஏ பிரிவின் கீழ் குற்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன் மார்டி மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி டி.ஜி.பி க்கு புகார் அளித்ததாகவும், இருவரும் உயர் அதிகாரிகள் என்பதாலும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள் என்பதாலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், காவல் கண்கானிப்பாளர் மீது பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர் தன்னுடைய கோரிக்கையை பொள்ளாச்சி அமர்வு நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெறலாம். அந்த மனு மீது நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடிந்து வைத்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.