2019ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு 'ஹலோ எஃப்எம்' சார்பாக விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி அரசியல் ஆளுமைப் பிரிவின் விருதுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஹலோ எஃப்எம்' சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றமைக்கு முதலமைச்சர் பழனிசாமியை, இந்தியா - அமெரிக்கா வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஜெயசீலன் தலைமையிலான குழுவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.