ETV Bharat / city

”ஈஸ்டர் திருநாள்” - அரசியல் தலைவர்கள் வாழ்த்து - மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ”ஈஸ்டர் தினம்” வாழ்த்து

சென்னை: இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர், தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

”ஈஸ்டர் தினம்” தலைவர்கள் வாழ்த்து.!
”ஈஸ்டர் தினம்” தலைவர்கள் வாழ்த்து.!
author img

By

Published : Apr 11, 2020, 8:37 PM IST

Updated : Apr 11, 2020, 10:04 PM IST

நாளை உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் “உயிர்த்தெழுந்த நாள்” மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்! “ஈஸ்டர் திருநாள்” கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டிய இந்த நாளில் நாம் எதிர்பாராத விதமாக “சுகாதாரப் பேரிடரை” சந்தித்து - சோதனைகளின் விளிம்பில் நிற்கிறோம்.

ஆனாலும், எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மனோதைரியத்துடன் - கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவரும் “சுய சுகாதார பாதுகாப்புடனும்” - மகிழ்ச்சியுடனும் “ஈஸ்டர் திருநாளை” கொண்டாடிட வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இன்றைக்கு உலகெங்கும் வாழும் மனித சமுதாயத்தைக் கலங்கடித்து, உயிர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கரோனா வைரஸ் கொள்ளை நோயிலிருந்து மனித குலம் பாதுகாக்கப்பட தங்களையே அர்ப்பணித்துக்கொண்டு சேவை செய்யும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், மனிதநேயத்தோடு உதவி புரிவோர் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற்று ஈஸ்டர் பண்டிகை அன்று எழுந்த மகிழ்ச்சியைப் போல மனிதகுலம் துயரத்திலிருந்து விடுபடட்டும் என்று ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை கிறிஸ்தவப் பெருமக்களுக்குத் தெரித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினையொட்டி நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். ஈஸ்டர் திருநாளில் விரதமிருக்கும் கிறிஸ்தவ மக்கள் அக்காலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது.

ஆனால் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து கொண்டாடப்பட வேண்டிய ஈஸ்டர் திருநாளில் கரோனா என்கிற கொடிய தொற்றுநோயின் கோரப்பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். தேவாலயங்களில் பெரும் திரளாகக் கூடி கொண்டாடப்பட வேண்டிய ஈஸ்டர் திருநாள் கரோனா நோயின் காரணமாக சமூக விலகலையும், தனிமைப்படுத்தலையும் கடைபிடிக்கவேண்டிய நிலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

மனிதர்களை துன்பத்திலிருந்து பாதுகாக்க மீண்டும் உயிர்த்தெழுந்த ஏசு பெருமான் கருணையால் கரோனா நோயின் கோரப்பிடியிலிருந்து மக்கள் நிச்சயம் மீள்வார்கள் என்று நம்புவோம்" என தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 11, 2020, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.