ETV Bharat / city

தஞ்சாவூர் தேர் விபத்து!- ஆளுநர் இரங்கல்! - பாஜக மாநிலத் தலைவர்

தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் விபத்தில் இறந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் தேர் விபத்து!- அரசியல் தலைவர்கள் இரங்கல்!

author img

By

Published : Apr 27, 2022, 11:09 AM IST

Updated : Apr 27, 2022, 12:10 PM IST

தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் அப்பர் கோயில் தேரோட்டத்தின் போது உயர் மின அழுத்த கம்பி மீது மோதியதில் மின் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்நிகழ்விற்கு குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சி தலைவர்களும் அவர்களது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி விபத்தை கேட்டு மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர்: தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி: எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரஙகல் பதிவில், விபத்து குறித்து கேட்ட போது மனமுடைந்ததாகவும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர்: பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், சிறுவர்கள் உட்பட 11 பேர் விபத்தில் இறந்தது மிகவும் வேதனையுற்றதாக தெரிவித்துள்ளார். ‘இனி இது போன்ற விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி :தஞ்சை களிமேடு பகுதி தேர் திருவிழாவில் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்ட போது மின்சாரம் தாக்கிய கொடூர விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெருந்துயரம் எனவும், உறவினர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.

  • தஞ்சாவூர்,களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில்,1/2

    — Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன்.

    3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.

    1/2

    — K.Annamalai (@annamalai_k) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • தஞ்சாவூரில் தேர் ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வேதனை தெரிவித்துள்ள மாண்புமிகு ஆளுநர்,
    திரு. ஆர்.என்.ரவி,அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

    — RAJ BHAVAN,TAMIL NADU (@rajbhavan_tn) April 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:தஞ்சாவூர் தேர் விபத்து- பிரதமர் மோடி இரங்கல்

Last Updated : Apr 27, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.