கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு கட்டியம் கூறும்விதமாக தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றினால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
ஏற்கனவே அவரது மகளுக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு தடவை நல்லகண்ணு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். நல்லகண்ணு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.