ETV Bharat / city

முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்ததற்காக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பரிசளித்து தங்களின் நன்றி தெரிவித்தனர்.

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, POLICEMEN THANKED CM STALIN FOR GIVING WEEK OFF FOR THEM, MK STALIN, முக ஸ்டாலின், ஸ்டாலின், STALIN,
முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த காவல்துறையினர்
author img

By

Published : Nov 6, 2021, 1:59 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில் , முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

அப்போது,'காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்திருந்தார்.

முதலமைச்சருக்கு நன்றி

மு.க. ஸ்டாலினை நேரில் சென்று பரிசளித்த காவலர்கள்

இதனைச் செயல்படுத்தும் விதமாக, இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டார்.

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, POLICEMEN THANKED CM STALIN FOR GIVING WEEK OFF FOR THEM, MK STALIN, முக ஸ்டாலின், ஸ்டாலின், STALIN,
முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த காவல்துறையினர்

இந்நிலையில், காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (நவ. 6) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை: அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.