ETV Bharat / city

நாளை முதல் கல்லூரிகள் திறப்பு: கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

author img

By

Published : Dec 6, 2020, 3:13 PM IST

சென்னை: இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நாளை(டிச.6) முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIG Balakrishnan
காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன்

கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. நீண்ட நாள் கழித்து நாளை(டிச.7) இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி திறக்க படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை காணொளியை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், "பல மாதங்கள் கழித்து கல்லூரி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெயரில் சமூக விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, "ரூட்டு தல" பிரச்சனைகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். கல்லூரிக்கு வரும் போதும், போகும் போதும் பேருந்துகளின் மேற்கூரைகளில் அமர்ந்து பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்த்து பொதுமக்களுக்கு இன்னல் தராத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும்

காவல் துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன்

குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இன்னல் தரும் வகையில் ஈடுபட்டால் சட்டம் கடுமையாக அவர்கள் மீது பாயும். மாணவர்கள் அனைவரும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக பணம் கடன் கொடுத்த வழக்கு: பெங்களூருவில் ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.