ETV Bharat / city

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் - பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை டன் எடையுள்ள 46 செம்மரக்கட்டைகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் எடையுள்ள 46 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள்

author img

By

Published : Nov 27, 2021, 10:40 PM IST

சென்னை: ஆந்திரா பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் லாரிகள் மூலமாகச் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாகச் சென்னை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலையடுத்து வடக்கு மண்டல இணை மற்றும் துணை ஆணையாளர் ஆணைக்கிணங்க, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பக்கமாகச் சென்ற லாரியை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒன்றரை டன் எடையுள்ள 46 செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், காவல்துறைக்குச் சந்தேகம் வராமல் இருக்க மேலே தார்ப்பாய் வைத்து அதன் கீழே கட்டைகளை வைத்து மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செம்மரக்கட்டைகள் பறிமுதல்

உடனடியாக லாரியை செம்மரக்கட்டைகளுடன் பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில் பிடிபட்ட நபர் செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த வெங்கடேசன்(38) என்பதும், இவர் செம்மரக்கட்டைகளை ஆந்திராவிலிருந்து லாரியில் ஏற்றி சென்னைக்குக் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனச்சரக அலுவலர் செல்வகுமார் தலைமையில் வந்த வனத்துறை அலுவலர்களிடம் பிடிபட்ட செம்மரக்கட்டைகள், வாகனம் மற்றும் வெங்கடேசனை போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, வெங்கடேசனை கிண்டிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க : World Fishermen Day: உலக மீனவர் தினவிழா - நாகை அருகே களைகட்டிய மீனவர் நீச்சல் போட்டி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.