ETV Bharat / city

ஜெ. நினைவிடத்திற்குச் செல்லும் அதிமுக தலைவர்கள்: 3000 காவலர்கள் பாதுகாப்பு

ஜெயலலிதா, அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் அதிமுக தலைவர்கள் மற்றும் சசிகலா மரியாதை செலுத்தவுள்ள நிலையில், 3 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இரு தரப்பும் மாறி மாறி பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

aiadmk formation day
aiadmk formation day
author img

By

Published : Oct 15, 2021, 10:02 PM IST

Updated : Oct 16, 2021, 8:55 AM IST

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மரியாதை நிமித்தமாக சசிகலா நாளை சென்று மரியாதை செலுத்த இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு கேட்டு சசிகலா சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல் அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டு நடைபெறுவதையொட்டி, அன்று காலை 10.30 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் மறைந்த தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

police protection on aiadmk formation day
அதிமுக பாதுகாப்பு

இதனால் இவர்களும் பாதுகாப்பு கேட்டு அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா, வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு சென்றனர். .

அக்டோபர் 16, 17 ஆம் தேதிகளில் மரியாதை செலுத்த சசிகலா, அதிமுக தலைவர்கள் செல்ல இருப்பதால் எந்தவித அசாம்பாவிதமும் நிகழாமல் தடுக்க 3 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரவுடி சுட்டுக்கொலை - தூத்துக்குடி போலீஸ் நடவடிக்கை

Last Updated : Oct 16, 2021, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.