சென்னை: அம்பத்தூரில் காந்திநகர் தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து கட்டட வேலை செய்துவருகிறார்கள்.
இவர்களில், ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த கிஷோரும் அவரது மனைவி புத்தினியும் நான்கு குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் கிஷோர் தங்கியிருந்த குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ’லாக் டவுன்’ என்ற பெயர் கொண்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென்று காணவில்லை எனக் கூறப்படுகிறது. குழந்தை காணவில்லை எனக் கட்டட பொறியாளர் முருகானந்தத்திடம் கிஷோர் கூறியுள்ளார்.
இருவரும் தேடிப்பார்த்தும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதையடுத்து, கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் தனிப்படை காவலர்கள் குழந்தையைத் தேடும் பணியைத் தொடங்கினர்.
குழந்தையை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 7) இரவு முதல் முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளை, காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு வேலை மோசடி; இந்து அரசியல் கட்சி பிரமுகர் மீது புகார்