சென்னை : police grievance redressal camp : பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவலர்களின் (ஆளிநர்கள்)துறை ரீதியான குறைகளை களைய "உங்கள் துறையில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால், தலைமையில் இன்று எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் (ஆளிநர்கள்) குறைகளை கேட்டறிந்தார்.
பணி இடமாறுதல், தண்டனை களைதல், ஊதிய முரண்பாடு களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் உள்ளிட்ட 461 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
உங்கள் துறையில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் ஆணையர் கடந்த 24 ஆம் தேதிஅன்று 431 மனுக்களும், இன்று 461 மனுக்களும் என இரண்டு நாட்களில் மொத்தம் 892 மனுக்களை நேரடியாக பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:Central team arrives in Chennai: சென்னை விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் ஆய்வு