சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து உள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜூலை 2ஆம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரில், 'சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவர் 2015ஆம் ஆண்டு முதல் தயாரிப்பு நிறுவனத்தின் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். தயாரிப்பு நிறுவனத்தின் வருமான வரி உட்பட அனைத்து கணக்கு வழக்குகளையும் ரம்யா கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டிய வரி விலக்குத் தொகையை செலுத்தாமல் போலியான ஆவணங்களைத் தயாரித்து ஏமாற்றி வந்தார் எனத் தெரிகிறது.
மேலும் வருமான வரித்துறையின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பாமல் ரம்யா, அவரது கணவர் தியாகராஜன், சகோதரி ராதிகா மற்றும் சகோதரர் ராஜேஷ் ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி பணத்தை கையாடல் செய்ததாக அறியமுடிகிறது.
இதனால் சந்தேகமடைந்து ரம்யாவிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் தலைமறைவாகி விட்டதாகத் தெரியவந்தது. மேலும் கணக்கு வழக்குகளை விசாரித்தபோது ரூ. 45 லட்சத்திற்கும் மேல் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனால் ரம்யா, தியாகராஜன், ராஜேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரம்யா, என் மீது மேலாளர் ஹரிகிருஷ்ணன் பொய்யான புகார் கொடுத்துள்ளார் என்றும் தகுந்த நேரத்தில் ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்கத் தயார் எனவும் கூறியிருந்தார்.
திடீரென்று மேலாளர் ஹரிகிருஷ்ணன் காரை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்துச் சென்றதாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கணக்காளர் ரம்யா மீது விருகம்பாக்கம் காவல் துறையினர் இ.பி.கோ சட்டப்பிரிவு 408 - ஊழியர் வேலைசெய்யும் இடத்திலேயே திருட்டில் ஈடுபடுதல், 420 - மோசடி, 468 - பொய்யான ஆவணங்களைத் தயாரித்தல், 471 - பொய்யான புனையப்பட்ட ஆவணங்களை உண்மையானதாக உபயோகப்படுத்துதல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ரம்யாவைத் தீவிரமாகத் தேடும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் விஷாலின் கணக்காளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு! - விஷாலின் ஃபிலிம் ஃபேக்டரி
சென்னை: நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் 45 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக, பெண் கணக்காளர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.