சென்னை: ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்த பெண் ஒருவருடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவிலிருந்து வந்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த குழந்தைக்கு 13 வயது ஆகி உள்ளது. இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் தாயுடன் தகாத உறவில் இருந்த போது, சிறுமிக்கும் 13 வயதிலிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சிறுமியிடம் அத்துமீறி பல முறை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். தற்போது அந்தப் பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார், மீண்டும் அந்த சிறுமியை, காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் பாலியல் உறவுக்கு வருமாறு பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனைப் பொறுக்க முடியாத அந்த சிறுமி வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் மீது புகார் அளித்தார். இதனை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் காவல்துறையினர் அந்த பெண் சிறுமியாக இருந்த காலகட்டத்தில் பலமுறை மிரட்டி காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு மாணவனால் 11ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை சடலமாக மீட்பு