ETV Bharat / city

ரூ.75 லட்சம் மோசடி-7 ஆண்டுகளுக்கு பிறகு கைது

சென்னையிலுள்ள தனியார் விளம்பர நிறுவனம் மூலம் மற்றொரு நிறுவனத்துக்கு விளம்பர செய்து ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஞ்சய் குமார் ஷர்மா
ஞ்சய் குமார் ஷர்மா
author img

By

Published : Mar 11, 2022, 6:44 AM IST

Updated : Mar 12, 2022, 1:13 PM IST

சென்னை: செனாய் நகரில் தனியார் விளம்பர நிறுவனம் நடத்தி வருபவர் கஜலட்சுமி. இவர் தனது நிறுவனம் மூலம் தினசரி நாளிதழ், வாராந்திர புத்தகங்கள் மற்றும் எஃப்.எம் ரேடியோக்களில் விளம்பரம் செய்து வருகிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு கஜலட்சுமிக்கு கோபால் மூலம் அறிமுகமான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் சர்மா (51) மற்றும் சிவாஜி பட்கர் ஆகிய இருவர் தாங்கள் லூதியானாவில் சொந்தமாக விளம்பர நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்கள் நிறுவனத்துக்காக விளம்பரம் செய்து தர வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.

ரூ.75 லட்சம் மோசடி

அதனடிப்படையில் கஜலட்சுமி தனது நிறுவனம் மூலம் 2014 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, சஞ்சய் குமார் மற்றும் சிவாஜி பட்கர் ஆகியோரின் நிறுவனத்திற்குத் தேவையான விளம்பரத்தை செய்து கொடுத்துள்ளார். ஆனால் கஜலட்சுமிக்கு செலுத்த வேண்டிய சுமார் 75 லட்சம் ரூபாயை செலுத்தாமல் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

இதனால் அதிர்ச்சியடைந்த கஜலட்சுமி, சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2015ஆம் ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். 7ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் குமார் சர்மா பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் பதுங்கியுள்ள தகவல் கிடைத்தது.

எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

அதனடிப்படையில் அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், 8ஆம் தேதி ஃபெரோஸ் காந்தி மார்க்கெட்டில் சஞ்சய் குமார் சர்மாவை கைது செய்து அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று மார்ச் 10ஆம் தேதி இன்று சென்னை அழைத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அடுத்தகட்டமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் குமார் சர்மாவைக் காவலில் எடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற இரு குற்றவாளிகளின் இருப்பிடத்தை அறியும் பொருட்டு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உ.பி.யின் 36 ஆண்டுகால தேர்தல் வரலாற்றை மாற்றிய யோகி!

Last Updated : Mar 12, 2022, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.