ETV Bharat / city

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை! - போக்சோ நீதிமன்றம்

சென்னை: எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Nov 3, 2020, 12:31 PM IST

சென்னை - பெசன்ட் நகர் அருகேயுள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (45). கடந்த 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 8 வயது சிறுமியை தட்சிணாமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் அடையாறு மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, தட்சிணாமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: நகைக்கடை கொள்ளை - காவல் துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.