நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, "தமிழ்நாடு கடைக்கோடி மாநிலம் என்பதால், நீர் வளத்தை மேம்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
புதிய நீர்நிலைகளை உருவாக்கும் திட்டம், நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் உள்ளது வரவேற்கக்தக்கது என்றும் குறிப்பிட்டார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட துணிந்தால், தமிழக அரசு அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு, காவிரி-கோதாவரி இணைப்பால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமையை உருவாக்கி, காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை பாசன வசதிக்கு பயன்படுத்தி கொள்ள மாநில அளவில் நீரியல் வல்லுநர்களை கொண்ட ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நதிகளை தேசியமயமாக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க : பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தனிக்குழு!