பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். விம்கோ நகர்- திருவொற்றியூர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி- குண்டாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமரின் வருகை தொடர்பான செய்தியால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பிரதமர் வருகையின் போது பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வருகையில் முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடை இறுதி செய்து தீவிர பரப்புரையை தொடங்குவதற்கான பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. கரோனா காலத்திற்கு பின் பிரதமரின் முதல் தமிழ்நாடு பயணம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு; ஹைதரபாத் மருத்துவமனையில் அனுமதி