ஹைதராபாத்: சமூக வலைதளத்தில் படுஆக்டிவ் ஆக இருக்கும் பிரபல சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடியவர். இணையப் புகழ்வாய்ந்த இந்த நித்யானந்தா சுவாமிகள் மீது காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கொட்டும் பண மழை: இந்த நிலையில் நாட்டை விட்டு ஓடிய நித்யானந்தா, கிங்பிஷர் விஜய் மல்லையா போல் வெளிநாட்டில் அடைக்கலம் தேடாமல் ஒரு நாட்டையே உருவாக்கியுள்ளார். அந்த நாட்டுக்கு கைலாசா எனப் பெயரிட்டுள்ள நித்யானந்தா அங்கிருந்தப்படி சமூக வலைதளத்தில் தனது சீடர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் ஆசிர்வாதம் வழங்கிவருகிறார்.
![Please stop this sending money says Nithyananda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/280683282_2246882355466751_879729228675169274_n_1905newsroom_1652931788_801.jpg)
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா படுத்த படுக்கையாக உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர் என்றெல்லாம் தகவல்கள் பரவியன. இதையடுத்து அவரது பக்தர்களும், சீடர்களும் பல்வேறு இடங்களில் இருந்தும் அவருக்கு பணம் வந்து குவிகிறது.
நித்யானந்தா சீடர்களுக்கு வேண்டுகோள்: இது தொடர்பாக பேஸ்புக்கில் நித்யானந்தா, “அனைத்து சீடர்கள் மற்றும் பக்தர்களுக்கும் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து பணம் அனுப்புவதை நிறுத்துங்கள். எனது உடல் நிலை குறித்த வதந்திகள் பரவிய நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இருந்தும் பணம் வந்து குவிகிறது.
தயவுசெய்து இந்தப் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள். இதனை எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவரும் செவிமடுக்கவும். நான் உங்களிடம் இருந்து பிரிந்து சென்றுவிடுவேனோ என நினைக்க வேண்டாம். உங்களின் பதற்றத்தை என்னால் உணர முடிகிறது.
மந்திரம் ஓதி வேண்டுங்கள்: பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களை விற்று, பணத்தைச் செலுத்தி எனது உடல் நலத்தைப் பேணுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். தயவு செய்து இதையும் நிறுத்துங்கள். உங்கள் நன்மைக்காகவோ அல்லது உலக நன்மைக்காகவோ நான் நீண்ட காலம் உயிரோடும் சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், எனது குருவான அருணகிரி ஆலயத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைக்கவும்.
![Please stop this sending money says Nithyananda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/280596903_2246883132133340_8147366519127390965_n_1905newsroom_1652931788_685.jpg)
இது அருணகிரி யோகேஸ்வரரை விவரிக்கும் ஸ்தோத்திரம், லாலாதே த்ரிபுந்த்ரீ நித்திலக்ருதா கஸ்தூரி திலக: ஸ்பூரன் மாலாதாரத் ஸ்பூரிதா காதி கௌபீனா வசனா | ததானோ துஸ்தாரம் ஷிரஸி ஃபாணிராஜம் சசிகலம் ப்ரதீபஹ ஸர்வேஷாம் அருணகிரி யோகி விஜயதே ||
வெற்றி: "திரிபூந்திரியை உடையவர் - புனித சாம்பலின் மூன்று கோடுகள் - அவரது நெற்றியில், புனிதமான கஸ்தூரியின் முத்திரை அவரது நெற்றியில் பொருந்தும், அவர் பளபளப்பான ஆடைகளை அணிந்தவர். வெல்ல முடியாத மன்னன் நாகப்பாம்பும் பிறை நிலவும் அவனது கிரீடத்தில் உள்ளன: எல்லா உயிர்களுக்கும் வெளிச்சம் தரும் அருணகிரி யோகேஸ்வரருக்கு வெற்றி" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேச்சு வரலை.. யாரையும் அடையாளம் தெரியலை.. என்ன ஆச்சு நித்தியானந்தாவுக்கு..?