ETV Bharat / city

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தனிக்குழு!

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் அரசு மாநகராட்சி ஆணையர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தனிக்குழு!
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தனிக்குழு!
author img

By

Published : Apr 6, 2022, 2:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருள்களான உணவுப்பொருள்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.

இவ்வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை போன்ற 12 வகையான பொருள்களை பயன்படுத்தலாம் என மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

6 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 20 தேதி முதல் நேற்று வரை 17,582 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 6.74 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11,19,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், பிளாஸ்டிக் பொருள்களை முறையாக பிரித்து, மறுசுழற்சி செய்யவும் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

19 பேர் கொண்ட தனிக்குழு: இக்குழுவில் துணை ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர், மாநகர நல அலுவலர், மாநகர வருவாய் அலுவலர், திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வை பொறியாளர், மீன்வளத்துறை உதவி இயக்குநர், கல்லூரி கல்வி மண்டல இயக்குநர், மண்டல உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் துறை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை இயக்குநர், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர், மாவட்ட தொழில் மைய மண்டல இயக்குநர், பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர், சென்னை மாவட்டம், அம்பத்தூர் மற்றும் அரும்பாக்கம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் உள்பட 19 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசினால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி முடிவு: அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.