மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவில், மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் 14-வது மாநில அளவிலான அதிகாரக்குழுவின் கூட்டம் செப்டம்பர் எட்டாம் தேதி அன்று துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு ரூ.10.65 கோடிக்கு இறுதி செய்யபட்டன. மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் சில விவாதிக்கப்பட்டன.
அப்போது துணைத் தலைவர், முன்பு எவ்வாறு மரவள்ளி பயிரின் சந்தை வாய்ப்புக்களை நிறுவனப்படுத்தி இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சாகோ சர்வ் போன்ற கூட்டுறவு அமைப்பின் மூலம் அன்றைய எம்ஜிஆர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதோ அதே வழியில் மஞ்சள் விற்பனையில் விவசாயிகளை இடைத்தரகர்களின் பிடியில் இருந்து மீட்க ஒரு கூட்டமைப்பை நிறுவுவதன் அவசியம்.
எனவே மஞ்சள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனைத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் ஆகியவை ஒன்றிணைந்து மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். என இவ்வாறு வலியுறுத்தினார்.