ETV Bharat / city

’மகளிர் இலவச பேருந்து’- பெண்கள் எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இயக்கம் - udhayanithi stalin

சென்னையில் பெண்களுக்கு இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் ‘பிங்க்’ நிற பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

’மகளிர் இலவச பேருந்து’- பெண்கள் எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இயக்கம்

author img

By

Published : Aug 6, 2022, 3:08 PM IST

சென்னை: மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளை சுலபமாக அடையாளம் காண வசதியாக பிங்க் நிறம் தீட்டப்பட்ட 61 பேருந்துகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில், 10 இணைப்பு சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்தார். சென்னையில் மொத்தம் 1,559 பேருந்துகளுக்கு இளம் சிவப்பு வண்ணம் பூசப்பட உள்ளது. முதல் கட்டமாக 61 பேருந்துகளுக்கு இளம் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து மகளிரும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

’மகளிர் இலவச பேருந்து’- பெண்கள் எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இயக்கம்

தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பணிப்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளித்தது. அந்த அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக, ‘மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு’ என குறிப்பிடப்பட்டு அதற்கான பயணச்சீட்டும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு, கிரீன் போர்டு, டீலக்ஸ் என பல்வேறு விதமான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இலவச பேருந்து எது என்ற குழப்பம் பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. இலவச பேருந்து அல்லாமல் மற்ற பேருந்துகளில் பெண்கள் ஏறிவிடும் நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் என்ஐஏ தேடுதல் வேட்டை - சிக்கிய இரண்டு புள்ளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.