சென்னை: அப்போலோ மருத்துவமனை, ஆசியாவிலேயே முதன்முறையாக, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக உடலினுள் பொருத்தப்படும் மிட்ராக்ளிப் [MitraClip] மற்றும் டிரான்ஸ்கத்தீட்டர் ஆர்டிக் வால்வு ரீப்ளேஸ்மென்ட் (Transcatheter Aortic Valve Replacement (TAVR)) எனப்படும் டிஏவிஆர் ஆகிய இரு உள்சாதனங்களை ஒரே நோயாளிக்கு பொருத்தி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 75 வயதான ஆண் நோயாளி ஒருவர் கடுமையான ஆர்டிக் ஸ்டெனோசிஸ் மற்றும் மிட்ரல் வால்வு (MitraClip) கோளாறு காரணமாக உடலின் தேவைகளுக்கேற்ற வகையில் ரத்தத்தை செலுத்த முடியாமல் இதயம் பிரச்சினைக்குள்ளாகும் கார்டியோஜெனிக் அதிர்ச்சியால் [Cardiogenic Shock] பாதிக்கபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மாரடைப்பு ஏற்பட்டு நிலைமை மேலும் சிக்கலானது.
ஆர்டிக் வால்வை [TAVR] மாற்றும் மருத்துவ நடைமுறை மற்றும் பழுதடைந்திருக்கும் மிட்ரல் வால்வை சரிசெய்வது என இந்த இரண்டு மருத்துவ சிகிச்சைகளுக்குமான அவசியத்தை உருவாக்கியதால், இந்த மருத்துவ சிகிச்சை ஒரு மைல்கல் சிகிச்சையாக கருதப்படுகிறது. இச்சிகிச்சையை அப்போலோ மருத்துவமனையின் சீனியர் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மருத்துவர் சாய் சதீஷ் வெற்றிகரமாக மேற்கொண்டார்.
மருத்துவர் சாய் சதீஷ் 24 மணி நேரத்தில் ஒன்பது டிஏவிஆர் மருத்துவ நடைமுறை மற்றும் மூன்று மிட்ராக்ளிப்களை பொருத்தி சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். மேலும் மருத்துவ சிகிச்சை நடைமுறை முடிக்கப்பட்ட அடுத்த 48 மணி நேரத்திற்கும் நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''இனி ஐடி பார்க்குகளிலும் பப் நடத்திக்கோ' - ஒப்புதல் அளித்த கேரள அமைச்சரவை'