சென்னை: பி.ஹெச்.டி பயிலக்கூடிய மாணவர்கள் முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டுமென்பது தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறையாகும். ஆனால், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை 75 விழுக்காடு ஆராய்சி மாணவர்கள் சமர்ப்பிப்பதில்லை என்பதை ஆய்வின் மூலம் யுஜிசி கண்டறிந்துள்ளது.
2ஆயிரத்து 573 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஐஐடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் தரமான ஆய்விதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை பிரசுரிப்பதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. ஆய்வு கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் வாயிலாக காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானிய குழு முடிவெடுத்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை என்கிற விதிமுறை கொண்டுவரப்பட பல்கலைக்கழக மானிய குழு முடிவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு நிமிடத்தில் 77 சிட்டப்ஸ் - நோவாவில் உலக சாதனை படைத்த கல்லூரி மாணவர்