தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் வீடு என சுமார் 26 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று (டிச. 04) சோதனை நடத்தினர்.
இந்த அமைப்பிற்கு நிதி எங்கிருந்து வருகிறது, நிர்வாகிகளின் வரவு-செலவு கணக்குகள் என்பது குறித்து ஆய்வுக்காக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
குறிப்பாக சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் பகுதியில் இயங்கிவரக்கூடிய பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா மாநிலத் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திவந்தபோது, இதனைக் கண்டிக்கும்விதமாக அந்த அமைப்பைச் சேர்ந்த தென்சென்னை மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் சுமார் 50 நபர்களுடன் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று (டிச. 04) சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் தென்சென்னை மாவட்டத் தலைவரான அபுபக்கர் சித்திக் உள்பட 50 நபர்கள் மீது சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், பணிசெய்யவிடாமல் தடுக்க முயற்சித்தல், தொற்றுநோய்ப் பரவல் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வேப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க...கோவையில் தொடர் மறியல் போராட்டம்: இடதுசாரி கட்சியினர் அறிவிப்பு!