நேற்று (ஆக.13) தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சென்னை, கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக இருந்தது பெட்ரோல் மீதான வரி குறைப்புதான்.
பெட்ரோல் மீதான மாநில வரியில் அரசு மூன்று ரூபாய் குறைத்த நிலையில் இன்று முதல் இந்த வரி குறைப்பு நடைமுறைக்கு வருகிறது. இச்சூழலில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.47 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பெட்ரோல் வரி குறைப்பு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் பல சிக்கல்களைக் கடந்து வரி குறைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் இது குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ - பிடிஆர்