ETV Bharat / city

பொதுச் செயலாளர் இல்லாமல் அவைத் தலைவரை நியமிக்க முடியுமா - அதிமுக தலைமைக்கு நீதிமன்றம் கேள்வி

அதிமுக அவைத் தலைவர் நியமனம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்
author img

By

Published : Nov 10, 2021, 5:48 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அம்மனுவில், அ.தி.மு.க. பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா இறந்த பின்பு சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்பு பொதுக்குழுவை கூட்டி, பொதுச்செயலாளர் பதவியை நீக்கி கட்சி விதிகளுக்கு புறம்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். இந்நிலையில், கட்சியின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் சமீபத்தில் காலமானார்.

இந்த பதவிக்கு வேறு நபரை தேர்வு செய்ய, ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்ட உள்ளனர். கட்சி விதிமுறைப்படி, பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தலை நடத்தி புதிய பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பின்பு பொதுக்குழுவை கூட்டி உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

அதிமுக தலைமைக்கு நீதிமன்றம் கேள்வி

இதன்பின்பு, தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அவைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை, அவைத்தலைவரை நியமனம் செய்யவோ? தேர்வு செய்யவோ? தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தாமோதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: TNPSC exam: 2016 குரூப் 4 தேர்வு முறைகேடு வெட்கக்கேடானது - நீதிபதிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.